சென்னை மெட்ரோ ரயிலில் த்ரிஷா பயணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலில் அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் கோலிவுட் நட்சத்திரங்கள் கடந்த சில நாட்களாக பயணம் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இன்று காலை நடிகை த்ரிஷா மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயிலில் ஏறிய த்ரிஷா, பயணிகளோடு பயணம் செய்தார். மெட்ரோ ரயிலில் இருந்தபடியே சென்னை நகரின் அழகை ரசித்து பார்த்த த்ரிஷா, பின்னர் அரும்பாக்கத்தில் இறங்கி கொண்டார்.
மெட்ரோ ரயில் பயணம் குறித்து நடிகை த்ரிஷா கூறும்போது, 'நான் நியூயார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பலமுறை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளேன். ஆனால் அதைவிட சென்னை மெட்ரோ ரயில் சிறப்பாக உள்ளது. ரயில் இருந்தபடியே நமது சென்னை நகரை பார்க்கும்போது த்ரில்லான அனுபவமாக இருந்தது. ஐரோப்பாவில் 'மன்மதன் அம்பு' படத்தின் ஒருசில காட்சிகள் மெட்ரோ ரயிலில் படமாக்கப்பட்டதை பெரிதும் ரசித்தேன். அதே உணர்வு சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது எனக்கு கிடைத்தது' என்று கூறியுள்ளார்/.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com