ஓவியாவுக்கு ஆதரவு கொடுத்த த்ரிஷா
Saturday, July 22, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ஓவியாவுக்கு ஏற்கனவே அமோக ஆதரவு அனைத்து தரப்பினர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி நடிகையான த்ரிஷாவும் தனது ஆதரவை ஓவியாவுக்கு தெரிவித்துள்ளார்.
த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில், 'எந்த சூழ்நிலையிலும், உலகின் எந்தப் பகுதியிலும், யதார்த்தமாகவோ அல்லது நகைச்சுவைவாகவோ, எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருவரை கொடுமைப்படுத்துதல் என்பது கோழைத்தனத்தின் செயலாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் த்ரிஷா, ஓவியா குறித்து நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் இதை படிக்கும் அனைவருக்கும் ஓவியாவுக்கு நடைபெற்று வரும் கொடுமையே ஞாபகத்துக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே த்ரிஷாவும் ஓவியாவும் கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' படத்தில் நடித்துள்ளனர். மேலும் 'போகி' என்ற படத்தில் நடிக்க இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Whether or no,under whatever circumstances,to whoever,in whichever part of the world,in reality or as a joke,BULLYING is an act of cowardice
— Trisha Krishnan (@trishtrashers) July 22, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments