ஒரே நாளில் ரிலீஸாகும் 4 நாயகிகளின் படம்: சன்னிலியோனை வீழ்த்துவாரா த்ரிஷா?

வரும் வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் 30-ஆம் தேதி நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நான்கு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா நடித்த ’ராங்கி’ மற்றும் சன்னி லியோன் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’டிரைவர் ஜமுனா’ மற்றும் கோவை சரளா நடித்த ‘செம்பி’ ஆகிய திரைப்படங்கள் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் திரையுலகில் ஒரே நாளில் 4 நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படங்களில் ’ராங்கி’ மற்றும் ’ஓ மை கோஸ்ட்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு படங்களில் வெற்றி பெறுவது த்ரிஷாவா? சன்னி லியோனா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ’டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவை சரளாவின் மிகச்சிறந்த நடிப்பில் உருவாகியிருக்கும் ’செம்பி’ நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நான்கு படங்களுமே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள படங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'சூரரை போற்று ஹிந்தி:  சூப்பர் அப்டேட்டை கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும்

12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரக்குழந்தைகளுக்கு பின் 67 வயது நபர் எடுத்த அதிரடி முடிவு!

உகாண்டா நாட்டில் 12 மனைவிகளை கொண்ட ஒருவர் 102 குழந்தைகள் மற்றும் 568 பேரக்குழந்தைகளுக்கு பின் எடுத்த அதிரடி முடிவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க்.. யார் யார் உள்ளே வந்திருக்காங்க பாருங்க!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருவார்கள் என்பதும் அந்த வாரம் முழுவதுமே உணர்ச்சி மயமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே .

இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிய ஒரே போட்டியாளர்: கேப்டனும் சிக்கினார்!

 ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் ஒரு போட்டியாளர் இருவரை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே. ஏ

கோவா சுற்றுலா சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்: போலீசார் அதிரடி நடவடிக்கை!

10 முதல் 14 வயதுடைய சிறுமிகள் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அதில் ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.