த்ரிஷா குறிப்பிடும் அந்த 'குப்பை' நபர் யார்? ரசிகர்கள் குழப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குப்பை நபர் என்று ஒருவரை குறிப்பிட்டு ஆத்திரத்துடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த குப்பை நபர் யார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போதும் இளம் நடிகைகளுக்கு இணையாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் பதிவு செய்துள்ள ஒரு ஆத்திரமான பதிவு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அந்த பதிவில் அவர், ‘கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கவேண்டும். ஒரு குப்பை தன்னைத்தானே வெளியேறி கொள்வதைப் போன்றது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து த்ரிஷா யாரை மனதில் வைத்து இதை பதிவு செய்து உள்ளார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments