'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு இதுவே காரணம்: த்ரிஷா

சமீபத்தில் வெளியான சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் முதல்நாளில் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு 4 நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வசூல் அளவில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் தனது விருப்பத்திற்கு உரியவர்களான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏஆர் ரகுமான் ஆகியோர்களின் கூட்டணியே என்றும் இந்த கூட்டணி எப்போதும் வெற்றி பெறும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ஏற்கனவே த்ரிஷா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணையும் ராம் - சீதா மகாலட்சுமி? 'சீதா ராமம்' இரண்டாம் பாகமா?

சமீபத்தில் வெளியான 'சீதா ராமம்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே.

திருமண நிச்சயதார்த்த விழாவில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்: வைரல் புகைப்படம்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் திருமண நிச்சயதார்த்த விழாவில் இருவரும் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடிக்கவிருக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களை அவ்வப்போது

அதிதியை அடுத்து சாண்டி மாஸ்டருடன் வேற லெவலில் டான்ஸ் ஆடும் 'விருமன்' நடிகை!

இயக்குனர் முத்தையா நடிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனரின் மகள் அதிதி ஷங்கர், சமீபத்தில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து ஒரு

அஜித்தின் 'ஏகே 61' படத்தின் டைட்டில் இதுவா? 46 ஆண்டுக்கு முன் வெளியான படத்தின் டைட்டில்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏகே 61'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்