'லியோ' LCU படமா? இல்லையா? என்பது எனக்கு தெரியும், ஆனால்..: த்ரிஷா

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆப்ஷன் காட்சிகள் மற்றும் ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் த்ரிஷா நடிக்க இருப்பதை அடுத்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ’லியோ’ படம் LCU படமா? என்ற கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, ‘லியோ LCU படமா? அல்லை LCU படம் இல்லையா என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பில் மே ஒன்றாம் தேதி முதல் நான் மீண்டும் கலந்து கொள்ள உள்ளேன். வரும் அக்டோபரில் இந்த படம் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கும். இந்த படம் குறித்து நாம் இன்னொரு நாள் விவாதிக்கலாம் என்று தெரிவித்தார்.

‘லியோ’ திரைப்படம் கண்டிப்பாக LCU படமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் த்ரிஷாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

சென்னையில் 'லியோ' அடுத்தகட்ட படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

மனித உறவுகளை நம்புபவர்.. சமுத்திரக்கனிக்கு வாழ்த்து தெரிவித்த அண்டை மாநில சூப்பர் ஸ்டார்..!

நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து

'தங்கலான்' டைட்டில் பிரிட்டிஷ் காலத்து புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? என்ன அர்த்தம் தெரியுமா?

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இந்த டைட்டில் எங்கே இருந்து

கோடைக்கு ஏற்ற குளுகுளு போட்டோஷூட்.. பிகினியில் நடிகை பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான பூனம் பாஜ்வா கருப்பு பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

விருது வழங்கும் விழாவுக்கு வரும் காஸ்ட்யூமா இது? பிரபல நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூனம் பாண்டே அணிந்திருந்த காஸ்ட்யூம்  குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது.