'தலை வணங்குகிறேன்'.. சூப்பர்ஹிட் படத்திற்கு த்ரிஷா கொடுத்த விமர்சனம்!
- IndiaGlitz, [Sunday,November 27 2022]
சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை பார்த்த நடிகை த்ரிஷா 'தலைவணங்குகிறேன்’ என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ள நிலையில் அவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக இருந்து வரும் த்ரிஷா சமீபத்தில் நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மூலம் மிகப் பெரிய புகழை பெற்றார் என்பதும் அந்த படத்தின் குந்தவை கேரக்டரில் த்ரிஷாவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று ’காந்தாரா’ என்பதும் 'பொன்னியின் செல்வன்’ மற்றும் ’காந்தாரா’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ’காந்தாரா’ படத்தை பார்த்த த்ரிஷா அந்த படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ’தலை வணங்குகிறேன்’ என்று தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ.400 கோடி வசூலித்த ’காந்தாரா’ திரைப்படம் தற்போது ஓடிடியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.