நயன்தாரா எனக்கு போட்டியா? மனம் திறந்த த்ரிஷா!

  • IndiaGlitz, [Friday,December 30 2022]

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா என்பதும் இருவரும் தற்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே. 

இந்தநிலையில் நயன்தாராவுடன் த்ரிஷாவை ரசிகர்கள் ஒப்பிட்டு வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு த்ரிஷா மனம் திறந்து பதிலளித்துள்ளார். நயன்தாராவுடன் என்னை ஒப்பிட்டு பேசுவதை நான் வரவேற்கிறேன், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் என் பயணத்தை தொடங்கினோம்,  இருவரும் ஒரே ஸ்டார்களுடன் நடித்துள்ளோம், எனவே எங்கள் இருவரையும் ஒப்பிடுவதற்கு சரியான காரணம் இருப்பதாக நான் கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் அவரவர்களுக்கு பிடித்த நடிகை புகழ்வதற்காக இன்னொரு நடிகையை இகழ்வாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் தனி சிறப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் நயன்தாராவுடன் தனக்கு அதிகமாக தொடர்பு இல்லை, ’காத்துவாகுல ‘ரெண்டு காதல்’ படத்தில் நடிப்பதற்கு நான் தான் முதலில் ஒப்பந்தமானேன், ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்பதால் விலகி விட்டேன் என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் த்ரிஷா நடித்த ’ராங்கி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.