மருத்துவ சிகிச்சையில் த்ரிஷா, சமந்தா, பூஜா ஹெக்டே.. என்ன ஆச்சு ஹீரோயின்களுக்கு?
Send us your feedback to audioarticles@vaarta.com
த்ரிஷா, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய நடிகைகள் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை பூஜா ஹெக்டே, ஹிந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாளி தண்ணீரில் கால் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’தினமும் இப்படித்தான் காலை விடிகிறது’ என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் படிப்படியாக குணமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரும் படிப்படியாக குணமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் அவர் புரமோஷனுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் நடிகை த்ரிஷா வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரும் சிகிச்சையில் உள்ளார். திரையுலகின் முன்னணி நடிகைகள் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தாமதமாகி வருவது மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments