எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும்: த்ரிஷா கூறிய உதாரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு விஜய் சேதுபதியுடன் த்ஷா நடித்த ’96’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றும் அந்த படத்தில் இடம்பெற்ற ராம், ஜானு ஆகிய கேரக்டர்கள் படம் பார்த்த ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்தக் கேரக்டர்களாக எண்ணி மகிழ்ந்ததால் அந்தப் படம் உணர்வுபூர்வமான வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்திற்காக ஏற்கனவே 11 விருதுகளை வென்றுள்ள நடிகை த்ஷா சமீபத்தில் பிலிம்பேர் விருதையும் வென்றார். இந்த நிலையில் இந்த படம் குறித்து திரிஷா கூறியபோது கூறியதாவது:
’96’படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களைப் படங்களில் பார்த்திருக்கிறேன். அதில் நான் நடித்து இந்த அளவுக்குப் பிரபலமாகும் எனத் தெரியாது. படம் வெற்றியடையும். அதில் உள்ள ராம், ஜானு கதாபாத்திரங்களுடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது. அவ்வளவு எளிமையான தோற்றம் அது. எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும். ஒருசில கதாபாத்திரங்கள் மேஜிக் போன்று நிகழும்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்குப் பிறகு ’96’ படத்தின் ஜானு கதாபாத்திரம் தான் இப்படியொரு அற்புதம் செய்தது. காதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என எண்ணுகிறேன்’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments