அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய த்ரிஷா.. அடுத்தது என்ன படம்?

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா, தற்போது சென்னை திரும்பி உள்ளதாகவும் உடனடியாக ஒரு சில நாட்களில் அவர் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் இருந்து த்ரிஷா சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் டொவினோ தாமஸ் உடன் நடிக்க இருக்கும் மலையாள திரைப்படமான ’ஐடென்டிட்டி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் நடைபெற இருப்பதாகவும் அப்போது மீண்டும் த்ரிஷா, இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

'என் மகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கனும்ன்னு சொல்லலாமா? நிக்சனிடம் வருத்தப்பட்ட நபர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பாக பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனாவின் அம்மா அப்பா, சரவணன் விக்ரமின் அம்மா அப்பா

பிரபாஸ் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்.. அதில் இருவர் தமிழ் நடிகைகளா?

பிரபாஸ்  நடித்துள்ள 'சலார்' விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது 'கல்கி 2898' உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாருதி இயக்கத்தில்

மனைவி எடுத்த புதிய முயற்சி.. வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால்..!

 நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி எடுத்த புதிய முயற்சிக்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'கங்குவா': பாலிவுட் நடிகருடன் சூர்யா மோதும் காட்சி..!

 சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்

பெரியோர்களே.. தாய்மார்களே.. சினிமா ரசிகர்களே... கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.