கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்தால் உடனே கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ பேப்பர்களை குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும்
உங்கள் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தேவையில்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்
அதிக கூட்டமாக இருக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உடனே உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சுகாதார மையத்தை அல்லது மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். அப்போது முக கவசம் போட்டுக் கொள்ள வேண்டும்
மேலும் விவரங்கள் தமிழ்நாடு பொது சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை திரிஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
— UNICEF India (@UNICEFIndia) March 19, 2020
@trishtrashers #UNICEF India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
#COVID19 க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.@NHM_TN @DrBeelaIAS @VijayaBaskarofl pic.twitter.com/5V4E05UfhQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com