close
Choose your channels

ஒரு நிமிட வீடியோவில் படங்களும் கேரக்டர்களும்: த்ரிஷா வெளியிட்ட வீடியோ!

Tuesday, October 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே. ’ஜோடி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த த்ரிஷா ’மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதுமுதல் கடந்த ஆண்டு வெளியான ’பேட்ட’ மற்றும் லாக்டவுன் நேரத்தில் வெளியான ’கார்த்திக் டயல் செய்த எண்’ வரை அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது அவர் நடித்த 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் ’பொன்னியின் செல்வன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முதல்படம் முதல் இதுவரை வெளியான படங்கள் வரையிலான அனைத்து படங்களின் டைட்டில்கள் மற்றும் அதில் அவர் நடித்த கேரக்டர்களில் வரையப்பட்ட அவரது புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒரே ஒரு வீடியோவில் த்ரிஷா நடித்த அனைத்து படங்களின் டைட்டில் மற்றும் அந்த படங்களில் அவரது கேரக்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்த வீடியோவை த்ரிஷாவின் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment