த்ரிஷாவின் ஐந்து மில்லியன் மைல்கல்! ரசிகர்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

தற்போது சமூக வலைத்தளங்கள் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒவ்வொருவரின் சமூகவலைத்தள பக்கமும் ஒரு மீடியா போல் அவ்வபோது பிரேக்கிங் செய்திகளை அளித்து வருகின்றன. அதனால் பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களுக்கு ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றது. குறிப்பாக திரையுலக பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மில்லியன் கணக்கான பாலோயர்களை பெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இன்னும் இளம் நாயகிகளுக்கு இணையாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.

இந்த நிலையில் த்ரிஷாவின் டுவிட்டர் பக்கம் இன்று ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

த்ரிஷா தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', '1818' மற்றும் 'பரமபத விளையாட்டு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மூன்றே நாளில் லாபத்தை பெற்ற 'எல்.கே.ஜி'

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவான 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் இந்த படத்தின் பட்ஜெட் தொகையை எடுத்துவிட்டதாகவும்,

விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகள் எடுக்கவில்லை

ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு வரவேற்பு அளித்த தனுஷ்-அனிருத்

திரையுலக பிரபலங்கள் அனைவருமே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிரபலத்திற்கும் தற்போது வலைத்தளம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது