த்ரிஷாவுக்கு பிடித்த மூன்று நடிகர்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Thursday,May 14 2020]

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் பல முன்னணி நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகில் நாயகியாக இருந்து வரும் நடிகை த்ரிஷா ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்தார்.

அப்போது த்ரிஷாவுக்கு பிடித்த நடிகர்கள் யார் என கேள்விக்கு ‘கமல்ஹாசன், மோகன்லால் மற்றும் அமீர்கான் ஆகியோரை குறிப்பிட்டார். கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் த்ரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு பிடித்த பாடல் ’மன்னிப்பாயா’ என்றும் தனக்கு பிடித்த வெப்சீரிஸ் ’செக்ஸ் அண்ட் சிட்டி’ என்றும் கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் த்ரிஷா, மோகன்லாலுடன் ‘ராம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் த்ரிஷா நடித்து முடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ மற்றும் கர்ஜனை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், கொரோனா பிரச்சனை முடிந்ததும் அவை வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நிவாரண நிதி வழங்கிய உலகப் பணக்காரர்கள்: மூன்றாவது இடத்தில் இந்திய தொழிலதிபர்!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே சில மாதங்கள் ஊரடங்கில் முடங்கியிருந்தன.

கொரோனா வைரஸோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்: கைவிரித்த WHO!!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை அடியோடு ஒழிக்க முடியாது, அதோடு வாழ்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்

பாக்சிங் நடிகையை பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டு பாட வைத்த கொரோனா

நடிகை ரித்திகா சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நயன்தாரா பட நடிகையின் 'வாத்தி கம்மிங்' வெர்ஷன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்

கொரோனா நுரையீரலை மட்டுமல்ல, மொத்த உடல் உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது!!! அதிர்ச்சித் தகவல்!!!

கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்தில் இது நிமோனியாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தையே மருத்துவர்கள் எழுப்பினர்.