த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷனுடன் சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

முன்னணி நடிகைகளான த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உடன் எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறார் என்பதும், அவர் தனது கணவர் நாகசைதன்யாவை பிரியப் போகிறார் என்று வதந்திகள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் சமந்தா திருப்பதி சென்று இருந்தபோது செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி என்று கேட்டபோது அதற்கு ’புத்தி இல்லையா? அவர் பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சக நடிகைகளான த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியவர்களுடன் சமந்தா எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சமந்தா தனது குழுவினருடன் திருப்பதி சென்ற புகைப்படத்தையும், தனது நாய்க்குட்டிகள் விளையாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.