கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கொத்தனாராக மாறிய த்ரிஷா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் யூனிசெப் அமைப்பில் குழந்தைகளுக்காக குரல் கொடுக்கும் அம்பாசிடர் பதவியை பெற்றார் என்பது தெரிந்தது
இந்த நிலையில் த்ரிஷா தற்போது களத்திலும் இறங்கி சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலி என்ற கிராமத்திற்கு சென்ற த்ரிஷா, அங்குள்ள பொதுமக்களிடம் கழிப்பறையின் அவசியம் குறித்தும், கழிப்பறை இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கினார். பின்னர் கழிப்பறை மாதிரி ஒன்றை கட்டி காண்பித்த த்ரிஷா கிட்டத்தட்ட ஒரு கொத்தனாராகவே மாறினார். மேலும் அங்குள்ள அதிகாரிகளுடன் அந்த பகுதி மக்களின் தேவைகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.
பாரத பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை வலியுறுத்தும் வகையில் யூனிசெப் பதவியில் இருக்கும் த்ரிஷாவின் இந்த சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments