யூனிசெப் அமைப்பிற்காக இன்று களமிறங்கிய நடிகை த்ரிஷா

  • IndiaGlitz, [Tuesday,June 12 2018]

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும், குழந்தைகளுக்கு உரிய கல்வியை வழங்க வேண்டும் என்பதே இந்த தினத்தின் குறிக்கோள் ஆகும்.

இந்த நிலையில் யூனிசெப் என்ற அமைப்பு இந்த தினத்தில் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்றும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வை உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் யூனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து நடிகை த்ரிஷா இன்று குழந்தை தொழிலாளர்களுக்கு முற்றுப்ப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அனைவரும் குழந்தை தொழிலாளிகளை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்டதை யூனிசெப் அமைப்பின் சமூக வலைத்தளப்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.