சொந்தக்குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா: எந்த படத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,October 09 2021]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான த்ரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷா ,தற்போது தனது டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே த்ரிஷா, மங்காத்தா உட்பட ஒரு சில படங்களில் மட்டும் டப்பிங் செய்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் த்ரிஷா மீண்டும் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பதும், இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது