படப்பிடிப்பின் கடைசி நாளில் நன்றி கூறிய த்ரிஷா .. வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
த்ரிஷா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அவர் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா, இளம் நடிகைக்கு இணையாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
குறிப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பின்னர் த்ரிஷா மார்க்கெட் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் த்ரிஷா தற்போது தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 'பிருந்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து த்ரிஷா படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். படப்பிடிப்பின் இறுதிநாளில் த்ரிஷா படக்குழுவினருக்கு நன்றி கூறிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ‘பிருந்தா’ தொடரின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த தொடர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
A video of @trishtrashers from #Brinda shooting spot.#Trisha #SouthQueen pic.twitter.com/UQdINbKipO
— Trisha Krishnan FC (@ActressTrisha) November 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments