த்ரிஷாவின் அடுத்த படத்தின் இயக்குனர்-தயாரிப்பாளர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,February 04 2019]

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. விஜய்சேதுபதி உள்பட பலர் அவரது சொந்த பெயரை மறந்து ஜானு என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு 'ஜானு' கேரக்டரை த்ரிஷா அனைவர் மனதிலும் பதியவிட்டுள்ளார்.

இந்த நிலையில் த்ரிஷாவின் அடுத்த படத்தை 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

த்ரிஷா ஏற்கனவே 'சதுரங்க வேட்டை 2', '1818', 'பரமபத விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.