த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகை த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படத்தில் இடம்பெற்ற ராம் மற்றும் ஜானு கேரக்டரை படம் பார்த்த யாராலும் மறக்க முடியாது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்திற்கு 96 படத்தின் கேரக்டர்களில் ஒன்றான ‘ராம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் த்ரிஷா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் த்ரிஷா டாக்டர் கேரக்டரில் நடிப்பதாகவும் அவரது கேரக்டர் பெயர் வினிதா என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாட்டில் குறிப்பாக குறிப்பாக பிரிட்டன் மற்றும் கெய்ரோவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.