த்ரிஷா நடித்த படத்தின் படப்பிடிப்பு.. முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

  • IndiaGlitz, [Sunday,April 28 2024]

நடிகை த்ரிஷா தற்போது ஐந்து முன்னணி ஹீரோக்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் படத்தின் முக்கிய அப்டேட்டை அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை த்ரிஷா தற்போது அஜித் உடன் ’விடாமுயற்சி’ மோகன்லாலுடன் ’ராம்’ கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ சிரஞ்சீவி உடன் ‘விஸ்வாம்பரா’ மற்றும் டொவினோ தாமஸ் உடன் ’ஐடெண்டிட்டி’ ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் த்ரிஷா நடித்து வரும் ’ஐடெண்டிட்டி’ படத்தின் இயக்குனர் அகில் பால் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக ஈரோடு பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது அந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு பகுதியில் சில ஆக்சன் காட்சிகள், சேஸிங் காட்சிகள் புழுதி பறக்க படமாக்கப்பட்டதாகவும், கடைசியாக நாங்கள் படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 99 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.