த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் எப்போது? டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. !
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா தென்னிந்திய திரையுலகின் பிசியான நடிகையாக இருந்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டீசர் மற்றும் திரையரங்க ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனுடன் ’தக்லைஃப்’, அஜித்துடன் ’விடாமுயற்சி’, மற்றும் ‘குட் பேட் அக்லி’ மோகன்லாலுடன் ’ராம்’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ டொவினோ, தாமஸ் உடன் ’ஐடென்டிட்டி’ போன்ற படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு வரிசையாக வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டொவினோ தாமஸுடன் த்ரிஷா நடித்த ’ஐடென்டிட்டி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டொவினோ தாமஸ், தனது சமூக வலைத்தளத்தில், ’ஐடென்டிட்டி’ படத்தின் டீசர் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக, டீசரில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Official Teaser Dropping on 04.12.24 !!#IDENTITY Loading...
— Tovino Thomas (@ttovino) November 29, 2024
an #akhilpaul #anaskhan film#Jan2025 pic.twitter.com/mAbAzYCbxx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments