close
Choose your channels

ஆரம்பமாகிறது த்ரிஷாவின் 'பரமபத விளையாட்டு

Friday, November 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வரும்  நடிகை த்ரிஷா, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் 'மோகினி', 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', '1818' மற்றும் '96' ஆகிய படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷா நடிக்கவுள்ள இன்னொரு படத்தின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'பரமபதம் விளையாட்டு' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த படத்தை 24HRS நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை திருஞானம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும். பிரேம் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் ஒளரங்கசீப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment