த்ரிஷாவின் புது ஹேர்ஸ்டைல்: ரஜினி படத்திற்காக மாற்றமா?

  • IndiaGlitz, [Monday,August 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'ரஜினி 165' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் நடிகை த்ரிஷாவும் இணைந்தார் என்பதும் ஏற்கனவே இந்த படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இணையதளங்களில் த்ரிஷாவின் புதிய ஹேர்ஸ்டலுடன் கூடிய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. ரஜினி படத்திற்காக த்ரிஷா தனது தலைமுடியை கட் செய்து வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு பெண் தனது முடியை கட் செய்தால் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்றும் தனது த்ரிஷா தனது சமூக வலைத்தள குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.