பிரபல பாடகியின் பயோபிக் திரைப்படம்.. த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா நடிக்க போட்டியா?

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

பிரபல கர்நாடக சங்கீத மேதை ஒருவரின் பயோபிக் திரைப்படத்தில் நயன்தாரா, த்ரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக சங்கீத மேதை மற்றும் பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கன்னட திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் எம்எஸ் சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா ஆகிய இருவரிடமும் கதை சொல்லப்பட்டிருப்பதாகவும் அதுமட்டுமின்றி ராஷ்மிகா மந்தனாவின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மட்டுமின்று உலகப்புகழ் பெற்ற பாடகியாக இருந்த எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தை வரும் 2025ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.