த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Friday,June 24 2016]

கடந்த பத்து வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா நடித்து முடித்துள்ள 'நாயகி' என்ற திகில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து பேய்ப்படங்களையும் ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, சுஷ்மாராஜ், கணேஷ் வெங்கட்ராமன், மனோபாலா, கோவை சரளா, பிரம்மானந்தம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது