த்ரிஷாவின் 'நாயகி' ஆடியோ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Friday,April 08 2016]

கோலிவுட், டோலிவுட் படவுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை த்ரிஷா தற்போது வித்தியாசமான கேரக்டரில் 'நாயகி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

'த்ரில்' படமாக உருவாகி வரும் நாயகி' படத்தில் த்ரிஷா வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

'அபியும் நானும்' படத்திற்கு பின்னர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுடன் த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ், கோவை சரளா, மனோபாலா, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவி இயக்கியுள்ள இந்த படத்தை த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

More News

'தெறி' முன்பதிவு தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...

மணிரத்னம் படத்தை தயாரிப்பது உண்மையா? ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் விளக்கம்

கடந்த ஆண்டு வெளிவந்த 'ஓகே கண்மணி' வெற்றி திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி, சாய்பல்லவி நடிக்கவுள்ளார் ...

ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் தேதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது...

34 வருடங்களுக்கு பின் ரீமேக் ஆகும் படத்தில் அனிருத்

கடந்த 1982ஆம் ஆண்டு நாரதமுனியாக விசு நடித்து இயக்கிய திரைப்படம் 'மணல் கயிறு'. எஸ்.வி.சேகர், மனோரமா...

இசைஞானியை மிஸ் செய்த சிவகார்த்திகேயன்

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 'ஓயே' திரைப்படம் விரைவில் வெளியாக படக்குழுவினர் தரப்பில் அனைத்து...