'த்ரிஷாவின் 'நாயகி' ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 19 2016]

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முடிசூடா நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'நாயகி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் 'நாயகி' படத்தின் பாடல்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவை பிரபல தெலுங்கு சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, சுஷ்மா ராஜ், கணேஷ் வெங்கட்ராமன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, கோவை சரளா, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகு குஞ்ச்சே இசையமைத்துள்ள இந்த படத்தை கோவி இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்யவுள்ளது.

More News

'தெறி' தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு விலகியிருப்பேன். சமந்தா

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்-அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர்...

முதன்முதலாக இணையும் கவுண்டமணி-சந்தானம்

கடந்த 1980கள் மற்றும் 90களில் காமெடி நடிகர் கவுண்டமணி நடிக்காத படமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார்....

லைகாவின் அடுத்த படத்தில் ஷங்கர்-வடிவேலு

கடந்த 2006ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம்....

அஜித் பிறந்த நாளில் கனெக்க்ஷன் ஆகும் மகேஷ்பாபு படம்

மகேஷ்பாபு நடித்த ஸ்ரீமுந்துடு-செல்வந்தன் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வந்த 'பிரம்மோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.....

'தெறி' சக்ஸஸ் பார்ட்டியில் விஜய்-அட்லி

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிய 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி....