ஜனவரி ரேஸில் இணையும் த்ரிஷா படம்

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

தமிழ் திரையுலகில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மட்டுமே. இந்த வகையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள த்ரிஷாவின் 'மோகினி' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சயிண்டிபிக் த்ரில்லர் படமான 'மோகினி' படத்தில் த்ரிஷாவுடன் சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ், யோகிபாபு, மயில்சாமி, உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் நடித்த 'மதுர' உள்பட பல படங்களை இயக்கிய மாதேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.

மெக்சிகோ, தாய்லாந்து, இங்கிலாந்து, ஸ்வீடன், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் விஜய்யின் பைரவா, சூர்யாவின் 'எஸ் 3' உள்பட பல திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் நிலையில் இந்த பட்டியலில் த்ரிஷாவின் 'மோகினி'யும் இணைந்துள்ளதால் த்ரிஷாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More News

சென்னை திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஓபிஎஸ் கொடுத்த ரூ.50 லட்சம்

14வது சென்னை திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம்...

ஒருநாள், டி-20 அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் என்ன நினைப்பாரோ என்று பயந்தேன்: 'பைரவா' எடிட்டர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள்...

ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம்? கூகுளில் தேடிப்பாருங்கள். மு.க.ஸ்டாலினை விளாசிய சசிகலா

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் நெருங்கும்போது, 'ஜல்லிக்கட்டு' அரசியல் நடத்துவது கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வழக்கமாகி வருகிறது...