close
Choose your channels

மோகினிக்காக த்ரிஷா எடுத்த அதிகபட்ச ரிஸ்க்

Monday, August 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் 'மோகினி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்தது. இந்த படத்தில் சமையல் கலை வல்லுனராக நடித்து வரும் த்ரிஷா ஆக்சன் காட்சிகளிலும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்த த்ரிஷா, 'மோகினி' படத்தில் கயிற்றில் தொங்கியபடியே சண்டைக்காட்சி ஒன்றில் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடிக்கவுள்ளாராம்.
தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள இந்த ஸ்டண்ட் காட்சியில் த்ரிஷாவுடன் புரபொசனல் ஸ்டண்ட் கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். இந்த சண்டைக்காட்சியின் படப்பிடிப்பிற்காக சென்னையில் பயிற்சி பெற்று வரும் த்ரிஷா, விரைவில் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா, ஜாக்கிபாக்னானி, சுவாமிநாதன், யோகிபாபு, கணேஷ்கர், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment