மோகினிக்காக த்ரிஷா எடுத்த அதிகபட்ச ரிஸ்க்

  • IndiaGlitz, [Monday,August 08 2016]

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் 'மோகினி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்தது. இந்த படத்தில் சமையல் கலை வல்லுனராக நடித்து வரும் த்ரிஷா ஆக்சன் காட்சிகளிலும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்த த்ரிஷா, 'மோகினி' படத்தில் கயிற்றில் தொங்கியபடியே சண்டைக்காட்சி ஒன்றில் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடிக்கவுள்ளாராம்.
தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள இந்த ஸ்டண்ட் காட்சியில் த்ரிஷாவுடன் புரபொசனல் ஸ்டண்ட் கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். இந்த சண்டைக்காட்சியின் படப்பிடிப்பிற்காக சென்னையில் பயிற்சி பெற்று வரும் த்ரிஷா, விரைவில் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா, ஜாக்கிபாக்னானி, சுவாமிநாதன், யோகிபாபு, கணேஷ்கர், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

More News

அஜித் 58 படத்தில் இணையும் 'தீனா' பிரபலங்கள்

தல அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில்...

கார்த்தியின் 'காஷ்மோரா' வியாபாரம் தொடங்கியது

கோலிவுட் திரையுலகில் பல தரமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்...

'ஆட்டைக்கு ரெடியா'. சிம்புவுடன் இணைந்த 'கபாலி' பாடகர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

திருமண வதந்தி குறித்து ஸ்ருதிஹாசனின் மெச்சூரிட்டி பதில்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது மிகவும் பிசியான நடிகைகளில்...

Sasi's big reentry with a big star

Director Sasi who has given commercial super hits and critically acclaimed Tamil films so far is all set to make a big bang reentry after many years in Tollywood ...