நெருக்கமானவரின் மறைவை தாங்க முடியாத த்ரிஷா.. பிரேக் எடுக்க போவதாக அறிவிப்பு..!
- IndiaGlitz, [Wednesday,December 25 2024]
நடிகை த்ரிஷா தனது நெருக்கமான ஒரு உயிரின் இழப்பை தாங்க முடியாமல், சில காலம் பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அஜித்துடன் மட்டும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திரிஷா செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் விருப்பம் உள்ளவர். அவர் ஜோரா என்ற நாய்க்குட்டியை மகனைப் போல கருதி வளர்த்து வந்தார். திடீரென, கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த நாய்க்குட்டி இறந்து விட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
எனக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த இழப்பு பற்றிய உணர்வுகள் நன்றாகத் தெரியும். நானும் எனது குடும்பமும் உடைந்து போய் உள்ளோம் என திரிஷா தெரிவித்தார். மேலும், இதிலிருந்து மீண்டு வர சில காலம் பணியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல், 12 ஆண்டுகளாக, மகனைப் போல கருதிய நாயின் இழப்பை தாங்க முடியாத திரிஷா, அந்த நாயின் புகைப்படத்தையும், இறுதிச் சடங்கு செய்து மாலை அணிவித்த புகைப்படத்தையும் பதிவுசெய்துள்ளார்.
Zorro🪽
— Trish (@trishtrashers) December 25, 2024
2012-2024🌈 pic.twitter.com/9JHOB3RFNp
— Trish (@trishtrashers) December 25, 2024