நயன்தாரா, ஐஸ்வர்யாராய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சரித்திர படத்தில் த்ரிஷா?
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவது தெரிந்ததே. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் உள்ள வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதேபோல் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
மேலும் நடிகர் ஜெயராம், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை த்ரிஷாவும் இணைய இருப்பதாகவும், அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. த்ரிஷா என்ன கேரக்டரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
ரூபாய் 800 கோடி செலவில் உருவாக இருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் யார் யார் எந்தெந்த கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பதை மணிரத்னம் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.