த்ரிஷாவுடன் காதலா? 'பாகுபலி' நடிகரின் ஓப்பன் டாக்
- IndiaGlitz, [Monday,December 24 2018]
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களில் 'பல்வாள்தேவன்' என்ற கேரக்டரில் நடித்த ராணா சமீபத்தில் கரண்ஜோஹர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இவருடன் பிரபாஸ், எஸ்.எஸ்,.ராஜமெளலி ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது 'த்ரிஷாவை காதலிக்கின்றீர்களா? என்ற கரண்ஜோஹரின் கேள்விக்கு பதிலளித்த ராணா, 'கடந்த பத்து ஆண்டுகளாக த்ரிஷா தன்னுடைய நண்பர் என்றும், அவருடன் காதல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் தெலுங்கு திரையுலகை பொருத்தவரை அனுஷ்கா தான் கவர்ச்சியான நடிகை என்றும், நடிகைகளில் தீபிகா படுகோனே தான் ஹாட் நடிகை என்றும் கூறினார்.
ராணாவும் த்ரிஷாவும் காதலித்து வருவதாக தெலுங்கு திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக கிசுகிசு வெளிவந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராணாவின் இந்த பேட்டி அமைந்துள்ளது.