'கோட்' திரைப்படத்தில் த்ரிஷாவின் டான்ஸ்.. இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட செம்ம புகைப்படம்..!
- IndiaGlitz, [Saturday,March 16 2024]
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றமாக ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். விஜய் மற்றும் த்ரிஷா நடனமாடும் இந்த பாடலின் படப்பிடிப்பு கூட சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் விஜய், த்ரிஷா உட்பட நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்கள் இந்த பாடல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்ற நிலையில் தற்போது த்ரிஷா இந்த பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளதை அடுத்து ’கோட்’ படத்தில் த்ரிஷா நடனம் ஆடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் சென்னையில் படப்பிடிப்பில் உள்ளேன் என்று கூறியுள்ள த்ரிஷா ’கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அட்டகாசமாக உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மீண்டும் விஜய், த்ரிஷா இணைந்து நடனம் ஆடியுள்ள பாடலை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.