சுசித்ரா சர்ச்சை கருத்துக்கு பதிலடி கொடுத்தாரா த்ரிஷா.. வைரல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சுசித்ரா சமீபத்தில் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த நிலையில் அந்த கருத்துக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்யின் பிறந்த நாளன்று நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்திற்கு பல்வேறு கதைகள் கட்டப்பட்டது என்பதும் பல வதந்திகளும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி பேட்டி அளித்து வரும் பாடகி சுசித்ரா, விஜய் மற்றும் த்ரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவில் 'உங்களை ஏதாவது ஒன்று செய்ய விடாமல் தடுத்தால், அது முழுக்க முழுக்க மற்றவர்கள் உங்களை பற்றி கூறும் கருத்துக்கள் மட்டுமே’ என்று பதிவு செய்துள்ளார். மற்றவரின் கருத்துக்களை கண்டுகொள்ளாமல் நாம் நம்முடைய வேலையை செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்ட இந்த கருத்து சுசித்ராவுக்கு மறைமுகமான பதிலடி என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
If there’s anything that you should stop wearing,it’s the weight of other people’s opinions😉✌🏻 pic.twitter.com/e9Jixl24JN
— Trish (@trishtrashers) July 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com