close
Choose your channels

பட்டையை கிளப்பும் 'மட்ட' பாடல்.. சமூக வலைத்தள டிரெண்டிங்கில் த்ரிஷா..!

Sunday, September 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற ’மட்ட’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகிய உள்ள நிலையில் இந்த பாடலில் விஜய்யுடன் டான்ஸ் ஆடியோ த்ரிஷா சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி முதல் நாளே 126 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மட்ட’ என்ற பாடலுக்கு விஜய் மற்றும் த்ரிஷா நடனமாடி உள்ள நிலையில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. ’கில்லி’ படத்தில் இடம்பெற்ற ’அப்படி போடு’ பாடலுக்கு பின் விஜய் மற்றும் த்ரிஷா ஆடிய இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதோடு, சமூக வலைதளங்களில் பலர் த்ரிஷா போன்று மஞ்சள் காஸ்டியூம் அணிந்து இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் காரணமாக த்ரிஷாவின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் ஆகி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முன்னதாக இந்த பாடலில் நடனமாட தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவர் முடியாது என்று சொன்னதை அடுத்து த்ரிஷா இந்த பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாகவும் கூறப்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment