த்ரிஷா அடுத்த படத்தின் சிங்கிள்.. சித் ஸ்ரீராம் குரலில் உருக வைக்கும் பாடல்..!

  • IndiaGlitz, [Friday,September 15 2023]

த்ரிஷா நடித்த அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் சித் ஸ்ரீராம் உருக வைக்கும் அளவுக்கு பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

நடிகை த்ரிஷா நடித்து முடித்த படங்களில் ஒன்று ’தி ரோடு’ இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சித் ஸ்ரீராம் குரலில், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளில், சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது உருக வைக்கும் அளவுக்கு உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகியுள்ள பாடலின் கவிதைத்தனமான வரிகள் இதோ:

ஓ விதி... யார் சதி.. யார் வலி..யார் ஒலி..
ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே..

ஈரம் உள்ள கூட்டில்
தீயை உமிழ்ந்தோர் யாரோ
பாதை வந்த வேளை
பாதம் கிழித்தோர் எவரோ

நீரில் இளைப்பாரும்
மீனின் கனவில்
ஒரு தூண்டில்
நிழல் ஆட்டும்
யாரின் விரலோ
யாவும் மாயையோ.

ஓ விதி... யார் சதி.. யார் வலி..யார் ஒலி..
ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே..

நேற்றிருந்த வாழ்வை
சூறை கொண்டு போச்சோ
வாங்கி வந்த நாளை
காலம் கொண்டே போச்சோ
சாம்பல் புயற்காற்றில்
ஓர் பறவை
அது சாவின் சுமையேறி
காணும் நிலவை
வாழ்வே வேலியோ..