'லியோ'வுக்கு முன்பே வெளியாகும் த்ரிஷாவின் இன்னொரு படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

தளபதி விஜய்யுடன் த்ரிஷா நடித்த ’லியோ’ என்ற திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த ’தி ரோடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

த்ரிஷா நடிப்பில் அருண் வசீகரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவான திரைப்படம் ‘தி ரோடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ்-க்கு தயாரானது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி ’தி ரோடு’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ’லியோ’ திரைப்படம் வெளியாகவுள்ளதால் அடுத்த மாதம் த்ரிஷா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் ’தி ரோடு’ படத்தில் டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா, உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.சிவராஜ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர்.