1168 அடியில் ரிஸ்க் எடுத்த த்ரிஷா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா தற்போது அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 'வட அமெரிக்கா விருதுகள் விழா'வில் கலந்து கொண்ட த்ரிஷா, கனடா தலைநகர் டொரண்டோவில் உள்ள ரோஜர் செண்டரில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
1168 அடி உயரத்தில் ரிஸ்க்கான போஸ் கொடுத்துள்ள த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. த்ரிஷாவின் இந்த தைரியமான புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தைரியமாக இருக்கும் த்ரிஷாவை பாராட்டுவோம்
த்ரிஷா தற்போது 'மோகினி', 'கர்ஜனை', சதுரங்க வேட்டை 2', '1818', '96', 'பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மோகினி' படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com