'உங்களுக்கு வயசே ஆகாதா.. 'ராங்கி' புரமோஷன் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகியும் நிலையில் அவர் இன்னும் டீனேஜ் பெண் போல் ’ராங்கி’ படத்தின் புரமோஷன் வீடியோவில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என கமென்ஸ் பகுதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’ராங்கி’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கதையில் ’எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் உருவாகி இந்த படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று வருடங்களில் ஆகிய நிலையில் தற்போது தான் இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோவில் த்ரிஷாவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
த்ரிஷாவுக்கு 39 வயது என்பதை நம்பவே முடியவில்லை என்றும் இன்னும் அவர் டீன் ஏஜ் பெண் போல் அழகாக ஜொலிக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67வது படத்திலும், அஜித் நடிக்கவிருக்கும் 62வது படத்திலும் த்ரிஷா தான் கதாநாயகி என்று கூறப்படுகிறது.
When in doubt,move…?????? pic.twitter.com/tyCPpQg44b
— Trish (@trishtrashers) December 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments