ஓடிடியில் த்ரிஷாவின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,April 04 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார் என்பதும் அவர் தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக ’பொன்னியின் செல்வன்’ உள்பட 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ’பரமபதம் விளையாட்டு’. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரு சில முறை அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரிஷாவின் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் ரிஷி, வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசையில், தினேஷ் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் பவித்ரா மற்றும் சுதர்ஷன்: புகழ் ரசிகர்கள் அதிர்ச்சி

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார்கள்

நடிகர் அக்சயகுமாருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்பட பல விஐபிகளுக்கும்

ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை!

ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச் பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

சின்னப்பையனைத்தான் திருமணம் செய்வேன்: 35 வயது ஜெயம் ரவி பட நடிகை அறிவிப்பு!

என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்றாங்க: பவித்ராவின் பாய்பிரண்ட் ஆதங்கம்!

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்டுகிறார்கள் என்றும் நான் உண்மையில் பவித்ராவின் நெருங்கிய நண்பர் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் சுதர்சன் பேட்டி