நீங்க சொல்றத கேட்க நான் ஒண்ணும் கட்சி தொண்டன் இல்லை: பரமபத விளையாட்டு டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் அவர் நடித்த 60வது திரைப்படமான 'பரமபத விளையாட்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் த்ரிஷா, அவரது மருத்துவமனையில் அட்மிட் ஆகும் ஒரு அரசியல் தலைவரின் உயிரை காப்பாற்றுவதும், அதற்கு பிற அரசியல் தலைவர்கள் தரும் இடைஞ்சலும், இதனால் த்ரிஷாவின் குழந்தை கடத்தப்படுவதும், அவர் எப்படி தனது குழந்தைகளை வில்லன்களில் இருந்து மீட்டார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

டாக்டராக த்ரிஷா, அரசியல்வாதிகளாக வேலராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன், த்ரிஷாவின் நண்பராக நந்தா, வில்லனாக ரிச்சர்ட் என கேரக்டர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம். த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கின்றது. அம்ரிஷின் இசையும், தினேஷின் ஒளிப்பதிவும் இந்த ஆக்சன் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. மொத்தத்தில் ஒரு அதிரடி ஆக்சன் நடிப்பை த்ரிஷாவிடம் இந்த படத்தில் முழுதாக எதிர்பார்க்கலாம்.