த்ரிஷாவின் அடுத்த படத்தின் உரிமையை வாங்கிய சென்னை பிரபலம்!

  • IndiaGlitz, [Sunday,January 26 2020]

 

கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் த்ரிஷா நடிப்பில் உருவான ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை ஜனவரி 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இதனையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன் அவர்கள் இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் மற்ற ரிலீஸ் உரிமைகளின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

திருஞானம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் த்ரிஷா உடன் நந்தா துரைராஜ், ரிச்சர்ட்ஸ் ரிஷி, வேல ராமமூர்த்தி, ஏ.எல் அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பில் தினேஷ் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது