7 மொழிகளில் த்ரிஷாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா தென் இந்திய திரை உலகில் பிசியான நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் நடித்த படம் நேரடியாக ஓடிடியில் 7 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
த்ரிஷா நடிப்பில் ’பிருந்தா’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சோனி லைவ் ஓடிடியில் இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய 7 மொழிகளில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் அந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் த்ரிஷாவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. மேலும் இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பதும் தெரிய வருகிறது.
த்ரிஷா, இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சூரிய மனோஜ் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் த்ரிஷாவின் வெற்றி பட பட்டியலில் இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Brace yourselves, thriller fans. Trisha is coming up with her OTT debut in a gripping new series. Stream #Brinda in all the major languages only on Sony LIV from August 2. @trishtrashers @Indrajith_S @suryavangala530 @andstoriesllp @KollaAshish @shakthikanth @artkolla pic.twitter.com/AqyykY1z9a
— Sony LIV (@SonyLIV) July 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments