close
Choose your channels

த்ரிஷா வழங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விருந்து

Tuesday, December 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று த்ரில் படமான 'மோகினி

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு தேதி குறித்த அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது.

மோகினி' படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 21ஆம் தேதியும், இந்த படத்தின் பாடல்கள் பொங்கல் தினத்தின் விருந்தாக வரும் ஜனவரி 12ஆம் தேதியும் வெளிவரவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமணா மாதேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜாக்கி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டன் உள்பட வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment