close
Choose your channels

ரசிகர்களுக்கு த்ரிஷா தரும் பொங்கல் விருந்து

Thursday, January 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் த்ரிஷாவின் படம் எதுவும் வெளிவரவில்லை எனினும், தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாத வகையில் அவர் நடித்த 'மோகினி' படத்தின் பாடல்கள் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

ஆம், த்ரிஷா நடித்த த்ரில் திரைப்படமான 'மோகினி' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி அதாவது நாளை வெளிவரவுள்ளது. மெர்வின் - சாலமன் இரட்டையர்கள் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெ'ரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த இரட்டையர்கள் நயன்தாரா நடித்த 'டோரா' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாறுபட்ட வேடங்களில் த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் ஜாக்கி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டன் உள்பட வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய் நடித்த 'மதுர', விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' போன்ற படங்களை இயக்கிய ரமணா மாதேஷ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment