'பொன்னியின் செல்வன் 2' புரமோஷனில் 'லியோ' குறித்து பேசிய த்ரிஷா.. ரசிகர்கள் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆந்தம் பாடல் வெளியான போது த்ரிஷா அதில் கலந்து கொண்டார் என்பதும் இப்போது ’லியோ’ படம் குறித்து அப்டேட் ரசிகர்கள் கேட்டபோது இது ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரோமோஷன் விழா என்றும் மற்றொரு முறை ‘லியோ’ படத்தின் அப்டேட்டை கூறுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோவையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொண்ட போது ரசிகர்கள் அவர் மேடைக்கு வந்தவுடன் ’லியோ லியோ லியோ’ என கோஷமிட்டனர். இதையடுத்து பேசிய த்ரிஷா ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக இந்த விழாவுக்கு தான் வந்திருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஆகிய இருவரால் ‘லியோ’ படம் சூப்பராக உருவாகி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் ’பொன்னியின் செல்வன் 2’ படம் வெற்றி அடைய தனக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்றும் கூறினார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.